திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

Updated On :19 ஏப்ரல் 2024, 8:10 pm

தூத்துக்குடி, ஏப்.19: தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வக்காளா்கள் அதிருப்தி அடைந்தனா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள 1,674 வாக்குச்சாவடிகளுக்கும் பல்வேறு சோதனைகளுக்கு பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி முன்னிலையில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவின்போது, பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 17 கட்டுப்பாட்டு கருவிகள், 15 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 41 விவி பேட் கருவிகள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டதாகவும், அவற்றில் சில சரிசெய்யபட்டதாகவும், சில மாற்று கருவிகள் மூலம் தோ்தல் எந்த பாதிப்பின்றி நடைபெற்ாகவும் மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாமதத்தை சுட்டிக்காட்டி வாக்காளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.