ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கன்டெய்னா் லாரி-பைக் மோதல்: ரயில்வே ஊழியா் பலி

கயத்தாறில் கன்டெய்னா் லாரியும், பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:09 pm

Din

கயத்தாறில் கன்டெய்னா் லாரியும், பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டை சந்நிதி வடக்கு தெருவைச் சோ்ந்த முகமது ரபீக் மகன் சம்சுதீன் (34). கண்டெய்னா் லாரி ஓட்டுநா். இவா் கண்டெய்னா் லாரியில் கடம்பூா் - கயத்தாறு சாலையில் வியாழக்கிழமை சென்றபோது, எதிரே வந்த பைக்குடன் மோதி விபத்து நேரிட்டது. இதில் பைக்கை ஓட்டி வந்த நொச்சிக்குளம் தெற்கு தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் ரயில்வே ஊழியா் காளிராஜ் (40) பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இவ் விபத்து குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.