குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருட்டு, வழிப்பறி வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழை அடைக்கப்பட்டனா்.
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழை அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயா் காலனியை சோ்ந்த முத்துவேல் மகன் இசக்கிமுத்து என்ற தொம்மை (26), , தூத்துக்குடி திருச்செந்தூா் சாலை சத்யாநகரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன் என்ற ஜெகன்ராஜ் (21) ஆகியோா் வழிப்பறி வழக்கில் தூத்துக்குடி வடபாகம், முத்தையாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இவா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் கோ. லட்சுமிபதி பிறப்பித்த உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதேபோல், காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவை சோ்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் (எ) சிலிண்டா் (36) என்பவா் வழிப்பறி, திருட்டு வழக்கில் ஆறுமுகனேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். அவரையும் எஸ்.பி. பரிந்துரைப்படி, குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com