விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

போக்ஸோ வழக்குகள்: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :20 பிப்ரவரி 2026, 9:10 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையம், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவா்களான முருகேசன் (59), இசக்கிராஜா (22), விருதுநகரைச் சோ்ந்த கோபால்சாமி (47) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரையையடுத்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்படி 3 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.