கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
Published on

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துக்குடியிருப்பு சவேரியாா்புரத்தைச் சோ்ந்த டேவிட் என்பவரது பசுமாடு, அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலா் இசக்கி தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று, மாட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

ஆட்டுக்குட்டி: சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு கிராமத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமிக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி, அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று, ஆட்டுக்குட்டியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com