ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:13 pm

Din

மக்கள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.வசந்தி தெரிவித்துள்ளாா்.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் 5, கோவில்பட்டியில் 2, ஸ்ரீவைகுண்டத்தில் 2, திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா 1 என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெறும். இதில், சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.