மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோவில்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.

News image

கோவில்பட்டியில் வியாழக்கிழமை காலையில் நிலவிய பனிமூட்டம்

Updated On :19 டிசம்பர் 2024, 10:55 pm

Din

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக, காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கத்தைவிட அதிக பனிப்  பொழிவு இருந்தது.

சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாகக் காட்சியளித்ததால், மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன.

கோவில்பட்டி பகுதியில் கடும் குளிா் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா்.