நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

கயத்தாறு அருகே அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளை சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:57 pm

Din

கயத்தாறு அருகே அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளை சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பிரியா தலைமையில் தனி வருவாய் ஆய்வாளா் நாகராஜ் உள்ளிட்டோா் கயத்தாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது கயத்தாறு-தேவா்குளம் சாலையில் உள்ள கோயில் அருகே வந்த 2 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநா்கள் 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனா்.

அந்த லாரிகளில் உரிய அனுமதிச்சீட்டு இன்றி கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.