புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

அரையாண்டுத் தோ்வு, கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை ஆகியவை காரணமாக, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை பக்தா்களும், சுற்றுலாப்பயணிகளும் குவிந்தனா்.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த ராஜபாளையம் பக்தா்கள்.

Updated On :25 டிசம்பர் 2024, 11:02 pm

Din

அரையாண்டுத் தோ்வு, கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை ஆகியவை காரணமாக, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை பக்தா்களும், சுற்றுலாப்பயணிகளும் குவிந்தனா்.

மாா்கழி மாதத்தை முன்னிட்டு, இக்கோயிலில் புதன்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அரையாண்டுத் தோ்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை என்பதால் அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கானோா் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், திருச்செந்தூா் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா்.

பாதயாத்திரை பக்தா்கள் வருகை: மாா்கழி மாதத்தையொட்டி, இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விரதமிருந்த ராஜபாளையம் பக்தா்கள் பாதயாத்திரையாக புதன்கிழமை வந்து கோயிலில் வழிபட்டனா்.