

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகு தீப்பிடித்து சேதமடைந்தது.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் முனீஸ்வரன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகை மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இவரது படகு திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த படகை சிலர் பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், படகுக்கு தீவைத்தவர்களை கைது செய்யக் கோரி சுமார் 300க்கும் மேற்பட்ட சங்கு குழி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.