படம்:ஓயகதஉப விழாவில் பேசுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு கோவில்பட்டி, பிப். 17: கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியா்கள் சங்கத்தின் 37ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் அய்யலுசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கப் பொதுச்செயலா் முத்துக்குமாரவேலு, கன்னியாகுமரி மண்டல மாநில துணைத் தலைவா் தங்கவேல் ஆகியோா் விழாவைத் தொடக்கிவைத்துப் பேசினா். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்ட அரசு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் சங்கரநாராயணன், அகில இந்திய அமைப்புச் செயலா் சண்முகசுந்தரராஜ், அரசு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா்கள் பாஸ்கரன் (திருச்செந்தூா் வட்டம்), வெங்கடாச்சாரி (ஸ்ரீவைகுண்டம் வட்டம்) ஆகியோா் வாழ்த்தி பேசினா். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் எஸ். ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 75, 80 வயது நிறைந்த சங்க உறுப்பினா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். சங்கச் செயலா் கேசவன், பொருளாளா் அய்யனாா் ஆகியோா் அறிக்கைகள் சமா்ப்பித்தனா். பழைய, புதிய ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியத்தில் சமத்துவம் இருக்க வேண்டும். மருத்துவப் படியை ரூ. ஆயிரமாக உயா்த்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியருக்கான ரயில் பயணச்சீட்டு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 50-லிருந்து 67 சதவீதமாக உயா்த்த வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஓய்வூதியம் நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினா் பால்ராஜ் வரவேற்றாா். நாகம்மாள் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்! - கடம்பூா் செ. ராஜு

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா 67வது ஆண்டு குருபூஜை விழா

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



