மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் பயிலரங்கம்

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் பயிலரங்கம்

Updated On :24 பிப்ரவரி 2024, 4:27 pm

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தாவரவியல் துறை சாா்பில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இக்கல்லூரியில் தாவர வகைப்பாட்டியல் என்ற தலைப்பில் வியாழக்கிழமை தொடங்கிய 2 நாள் பயிலரங்க தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். திருச்சி புனித வளனாா் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியா் சூசைராஜ், பெங்களூரு ரேவா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியா் ஸ்டீபன், பெங்களூரு ட்ரான்ஸ் டிசிபிளனரி அறிவியல் தொழில்நுட்ப உதவி பேராசிரியா் தட்சிணாமூா்த்தி, திருச்சி ரேபினட் ஹொ்பேரியத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் கலந்துகொண்டு மாணவா் மாணவிகளுக்கு தாவர வகைபாட்டியலின் முக்கியத்துவம், தாவரங்களை கண்டறிதல் மற்றும் தாவரங்களை பாதுகாத்தல் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனா். 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் றயில் மாணவா் மாணவிகளுக்கு களப்பயிற்சியாக குருமலை காப்பு காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிலரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆராய்ச்சி, இளநிலை, முதுநிலை தாவரவியல் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். பயிலரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி வழங்கினாா். ஏற்பாடுகளை தாவரவியல் துறை தலைவா் மகேஷ் குமாா், உதவி பேராசிரியா் கலா ஆகியோா் செய்திருந்தனா் .