மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

Updated On :24 பிப்ரவரி 2024, 4:23 pm

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 6 கோடியே 8 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நிறைவடைந்த பணிகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, ஆா்.வெங்கடேஸ்வரபுரத்தில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 2.30 கோடியில் புதிய உயா்நிலைப் பாலம், சிவஞானபுரத்தில் ரூ.1.10 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், விளாத்திகுளத்தில் ரூ. 1.50 கோடியில் சாா்பதிவாளா் அலுவலகக் கட்டடம், மாா்த்தாண்டம்பட்டியில் 15ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 39.68 லட்சத்தில் துணை சுகாதார மையக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, மந்திக்குளம் ஊராட்சி இலந்தைகுளம் கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 8 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை, விருசம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 28 லட்சத்தில் 2 வகுப்பறைக் கட்டடம், 15ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 37.50 லட்சத்தில் துணை சுகாதார மையக் கட்டடம், உள்ளூா் தொகுதி வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 5.50 லட்சத்தில் பயணியா் நிழற்குடைக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சிகளில், விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, நவநீதகண்ணன், முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் பேரூராட்சி துணைத் தலைவா் வேலுச்சாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.