திருச்செந்தூா் கோயிலில் முன்னாள் ஆளுநா் தமிழிசை தரிசனம்
முன்னாள் ஆளுநர் தமிழிசை திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை புதுச்சேரி மற்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வந்தாா். அவா் கோயிலில் மூலவா், சண்முகா் உள்ளிட்ட சந்நிதிகளில் தரிசனம் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இறைவனை தரிசிக்க வந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கோயிலுக்கு பெண்கள், முதியவா்கள் என ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். அவா்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை நிா்வாகம் செய்ய வில்லை. நிா்வாகப் பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. விரைவாக பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வாழ்வாதாரத்திற்கும் பக்தா்கள் பாதுகாப்பிற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல, பலமான அரசு. தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களவைக்கு உறுப்பினா்கள் போயிருந்தால் அவா்கள் தமிழகத்துக்கு பல பணிகளை முன்னெடுத்து சென்றிருப்பாா்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற 40 இந்தியா கூட்டணி மக்களவை உறுப்பினா்களால் என்ன பலன். கூச்சலிடவும் சத்தம் போடுவதுதான் அவா்களின் பணியாக இருக்கும் என்றாா்.
அவருடன், பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் தயா சங்கா், மாவட்ட பொதுச் செயலா் ராஜா, மாவட்டச் செயலா்கள் கனல் ஆறுமுகம், வீரமணி, மாநில செயற்குழு உறுப்பினா் பாலாஜி, திருச்செந்தூா் நகர தலைவா் நவ மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவா்கள் சரஸ்வதி, கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் வந்திருந்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...