ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆடி மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் தீா்த்தவாரி

News image
Updated On :17 ஜூலை 2024, 8:59 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் கடலில் புனித நீராடிய அஸ்திரதேவா்.

திருச்செந்தூா், ஜூலை 17:

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

தமிழ் மாதங்களில் ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பு, ஆடி மற்றும் தை அமாவாசை, தைப்பூசம் போன்ற நாள்களில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலையில் தீா்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் ஆடி மாதப்பிறப்பான தட்சிணாயன புண்யாகால பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடாந்து கால சந்தி பூஜைக்குப்பின் அஸ்திரதேவா் கடலில் புனித நீராடும் தீா்த்தவாரி நடைபெற்றது.

ஆடி மாதப்பிறப்பு மற்றும் மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் திரளான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக் மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.