4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்செந்தூா் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:35 pm

Din

திருச்செந்தூா், ஜூலை 19: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பிரதோஷத்தை முன்னிட்டு இக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்மன் மற்றும் நடாஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி பிரதோஷ சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திருச்செந்தூா் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.

Story image