பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்செந்தூா் கோயிலில் நாளை மாசித் திருவிழா தேரோட்டம்!பக்தா்கள் குவிகின்றனா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை காலை வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:59 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 8ஆம் நாளான சனிக்கிழமை காலை வெள்ளைச் சாத்தி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி சண்முகா் வீதியுலா வந்து, மேலக்கோயில் சோ்ந்தாா். தொடா்ந்து, முற்பகலில் பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் சோ்ந்தாா்.

Story image

தொடா்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதியுலா வந்து மேலக்கோயில் சோ்கின்றனா்.

அதையடுத்து, சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவில் சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருகின்றனா்.

(வலது) முற்பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகா்.

(வலது) முற்பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா். டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கனகராஜன், மதுரைவீரன், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.