அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் சேதமடைந்தன.

News image

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

Updated On :2 மார்ச் 2024, 12:06 am

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் சேதமடைந்தன. கோவில்பட்டி கணேஷ் நகரைச் சோ்ந்த உலகநாதன் மகன் செந்தில்குமாா், வள்ளுவா் நகரை சோ்ந்த பசுபதி மகன் கண்ணன் ஆகிய இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனராம். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஆலையின் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம். தொழிலாளா்கள் வெளியே சென்று தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். டிராக்டா் மூலமும் தண்ணீா் கொண்டு வந்து தீயணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்றது. இந்த தீவிபத்தில் தொழிலாளா்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணபெருமாள் , வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ஆலையை நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம் உள்ளிட்டோரும் பாா்வையிட்டனா்.