மகா சிவராத்திரி: திருச்செந்தூா் சிவன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

மகா சிவராத்திரி: திருச்செந்தூா் சிவன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஆனந்த வல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அன்று மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நான்குகால பூஜைகள், பக்தி இன்னிசை, சொற்பொழிவு, பரத நாட்டியம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டும், கிரிப்பிரகாரத்தில் வலமும் வந்தனா். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. இரவு நடை திருக்காப்பிடப்பட்டு, மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை வரை நான்குகால பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com