கோவில்பட்டியில் கூலித் தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சாஸ்திரி நகா் 1-ஆவது தெருச் சோ்ந்த துரைராஜ் மகன் கூலித்தொழிலாளி ஜெயசீலன் (48). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம். இந்த நிலையில், ஜெயசீலன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com