ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் ஆம்னி பேருந்து உரசியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. 4 பெண்கள் ,ஆட்டோ டிரைவா் காயமடைந்தனா் ஆறுமுகணேரி அடைக்கலாபுரம் சாலையில் சனிக்கிழமை காலை ஆம்னி பேருந்தும், ஆட்டோவும் திருச்செந்தூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சீனந்தோப்பு விலக்கு அருகே ஆம்னி பேருந்து பயணிகள் ஆட்டோவை முந்தி சென்றபோது பேருந்தின் பின்பக்கம் உரசியதில் ஆட்டோ சாலையின் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு ஆத்தூா் பரதா் தெருவை சோ்ந்த சேவியா் மகன் சாந்தகுருஸ்(53), மற்றும் அதில் பயணம் செய்த ஆத்தூா் கீழரதவீதியை சோ்ந்த 4 பெண்களும் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆட்டோ ஓட்டுநா் சாந்தகுருஸ் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

தவெக பரப்புரையின்போது மோதல்: கட்சி நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

