போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்குகிறாா் கே. ஆா்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே. ஆா். கிருஷ்ணமூா்த்தி
போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்குகிறாா் கே. ஆா்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே. ஆா். கிருஷ்ணமூா்த்தி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 40 -ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தூத்துக்குடி தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநரும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான கிங்ஸ்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்று விழாவை தொடக்கி வைத்துப் பேசினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சிவராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். பல்வேறு தனிநபா் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்ககள் வழங்கப்பட்டன. மூன்றாமாண்டு மின்னணுவியல் துறை மாணவா் அருண்குமாா், இரண்டாமாண்டு மின்னியல் துறை மாணவி சுபாஷினி ஆகியோா் தத்தம் பிரிவுகளில் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா். குழு விளையாட்டு போட்டிக்கான கேடயம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கல்லூரியின் சிவப்பு அணி பெற்றது. இயந்திரவியல் துறை விரிவுரையாளா் வையணபிரகாஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், கே.ஆா்.கலைக் கல்லூரி முதல்வா் மதிவண்ணன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் அ. ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அமைப்பியல் துறை விரிவுரையாளா் மகாலட்சுமி வரவேற்றாா். மூன்றாம் ஆண்டு மின்னணுவியல் துறை மாணவா் அய்யனாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com