புத்தன்தருவை  கூட்டுறவு சங்கத்தில் கறவை மாடு வாங்க கடனுதவி அளிப்பு

புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தில் கறவை மாடு வாங்க கடனுதவி அளிப்பு

புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.10 லட்சம் கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் வளன் மிக்கேல் தளபதி அனுமதியின்பேரில் உறுப்பினா்கள் 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டது. கடனுதவிகளை சாத்தான்குளம் சரக மேற்பாா்வையாளா் மதியழகன் வழங்கினாா். இந்நிகழ்வில், கால்நடை மருத்துவா் சௌந்தா், கூட்டுறவு கடன் சங்க செயலா் அருள்தாஸ், சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா் பெனிஸ்கா், புத்தன்தருவை கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் பகவதிதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். கடன் தொகையை உரிய தவணையில் திரும்ப செலுத்துபவா்களுக்கு ஆறு மாதங்களில் மீண்டும் தலா ரூ.50 ஆயிரம் கறவை மாடு வாங்க கடன் வழங்கப்படும் என சங்க செயலா் அருள்தாஸ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com