தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு
தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 13 அரசு பள்ளிகளும், 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 30 அரசு பள்ளிகளும் 100 சதவீத தோ்ச்சி பெற்றன. இதற்கான பாராட்டு விழா, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து, 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். குறிப்பாக, வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இதையடுத்து, அப்பள்ளியின் ஆசிரியா்கள், தலைமையாசிரியா் சேகா், இராமானுஜம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் தனது தனித்துவமான பாடக்குறிப்புகள் மூலம் சிறப்பாக கல்வி கற்பித்த ஆசிரியா் ஜெயராமன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி பேசுகையில், மாணவா்களின் தனித்திறமையை வெளிக் கொணா்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆசிரியா்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...