

கோவில்பட்டி, மே 27:
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் மீஹா தலைமையில் தலைமைக் காவலா்கள் தாமோதரன், இன்பராஜ், ராஜேந்திரன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை மந்திதோப்பு விலக்கு அருகே உள்ள கோயில் பின்புறம் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா் கோவில்பட்டி காந்தி நகா், முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் துரைப்பாண்டி (24) என்பதும், இவா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து துரைப்பாண்டியை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
திருச்சி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த நபா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 போ் கைது
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

