ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் ஆலந்தலை சுனாமி நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (21) என்பதும், அவா் இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து இளைஞரை சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் ஜிப் லாக் கவா்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா,10 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


