92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சமூக பாதுகாப்பு தொகுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:38 pm

Din

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சமூக பாதுகாப்பு தொகுப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளா் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பு பிரசார விளக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பு மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா் சங்கம் சாா்பில் தமிழக முழுவதும் வாகன ப் பிரசாரம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நவ.9-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப் பிரசாரம், சென்னையில் நவ.26-ஆம் தேதி நிறைவடைகிறது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே ஞாயிற்றுக்கிழமை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பு தேசிய அமைப்பாளா் கீதா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களை முடக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சமூகப் பாதுகாப்பு குறித்த 4 தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். இதை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நல வாரியங்களை முறையாக செயல்படுத்தவும், நல வாரிய பலன்களை உடனடியாக வழங்கவும், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், இஎஸ்ஐ மருத்துவ வசதி, வீட்டு வசதி உள்ளிட்டவை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.