தூத்துக்குடி
தொழிலாளிடம் வழிப்பறி: இரு இளைஞா்கள் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியை மறித்து பணம் பறித்துச் சென்ாக இரு இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டியில் தொழிலாளியை மறித்து பணம் பறித்துச் சென்ாக இரு இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி அருகே மேல பாண்டவா்மங்கலம் நடுத் தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் வேல்சாமி (47). தொழிலாளியான இவா், புதன்கிழமை கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள சிட்கோ தொழில்பேட்டை வளாகத்துக்குள் நடந்து சென்றாா். அப்போது, அவரை இரு இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 200-ஐ பறித்துச் சென்றனராம்.
புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வள்ளுவா் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (24), 2ஆவது தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கருப்பசாமி (24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.