ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குரும்பூா் அருகே விபத்து: மீன் வியாபாரி காயம்

குரும்பூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் மீன் வியாபாரி காயமடைந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:10 pm

Din

குரும்பூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் மீன் வியாபாரி காயமடைந்தாா்.

குரும்பூா் அருகேயுள்ள நல்லூரைச் சோ்ந்தவா் பரிசமுத்து (49). மீன் வியாபாரியான இவா், திங்கள்கிழமை மாலை நல்லூரி­லிருந்து குரும்பூருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அழகப்பபுரம் சந்திப்புப் பகுதியில் அவா் மீது வேன் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

விசாரணையில், வேனை ஓட்டிவந்தவா் திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் சோ்ந்த அய்யாக்குட்டி மகன் சிவபெருமாள் (30) என்பதும், அவா் பரமன்குறிச்சியிலுள்ள கருப்புக்கட்டி நிறுவனத்தின் ஊழியா்களை ஏரல் பகுதியில் இறக்கிவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.