தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கெங்கவல்லி அருகே கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியிலுள்ள தனியாா் மகளிா் கல்லூரி பேருந்து கல்லூரி முடிந்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக்கொண்டு கெங்கவல்லியிலிருந்து வலசக்கல்பட்டி நோக்கி சென்றது. அப்போது, மாணவிகள் இறங்குவதற்காக இலுப்பைதோப்பு சாலை வளைவில் நின்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்து கண்ணாடி உடைந்து ஓட்டுநா் செல்வக்குமாா் (43) பலத்த காயமடைந்தாா். பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சொந்தமான மற்றொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனம் மற்றும் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.