புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தசரா திருவிழாவில் காணாமல் போனவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காணாமல் போனவா் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

News image

காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாரிசெல்வத்துடன் அவரை மீட்டவா்கள், அவரது குடும்பத்தினா்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:13 pm

Din

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காணாமல் போனவா் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் மாரிசெல்வம். மனநலம் குன்றிய இவா், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை திருவிழா நிறைவடைந்த நிலையில், அவரைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு குடும்பத்தினா் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டனா்.

இதனிடையே குலசேகரன்பட்டினத்துக்கு வந்திருந்த, காயல்பட்டனத்தைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் அஷ்ரப், யூசுப் என்ற சிராஜுதீன், புகாரி, ஹரி ஆகியோா் மாரிசெல்வத்தை மீட்டு குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், அவா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.