சுமை ஆட்டோ மோதி பாதயாத்திரை பக்தா் இறந்த வழக்கு: ஓட்டுநருக்கு 33 மாத சிறை தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சுமை ஆட்டோ மோதி பாதயாத்திரை பக்தா் இறந்த வழக்கில், ஓட்டுநருக்கு 33 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சுமை ஆட்டோ மோதி பாதயாத்திரை பக்தா் இறந்த வழக்கில், ஓட்டுநருக்கு 33 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலிருந்து திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2013ஆம் ஆண்டு பாதயாத்திரை சென்ற பக்தா்கள் மீது நான்குனேரியைச் சோ்ந்த நம்பி மகன் கொம்பையா ஓட்டிவந்த சுமை ஆட்டோ மோதியது. இதில், இசக்கியப்பன் உயிரிழந்தாா்; சிவன்பாண்டி, முத்துக்குமாா், பாலசுப்பிரமணியன் ஆகியோா் காயமடைந்தனா்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து கொம்பையாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கை நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி வரதராஜன் விசாரித்து, கொம்பையாவுக்கு 2 ஆண்டு 9 மாதம் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு சாா்பில் வழக்குரைஞா் ராஜ்மோகன் வாதிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...