குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி: ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞா் கடன் உதவி திட்டத்தில் 7 சதவீத வட்டியில் கடனுதவி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞா் கடன் உதவி திட்டத்தில் 7 சதவீத வட்டியில் கடனுதவி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியின் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கிளைகளில், ‘கலைஞா் கடன் உதவி’ திட்டத்தின்கீழ் புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் கடன் பெற 18 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் இருப்பது அவசியம். புதிய நிறுவனங்களுக்கு தொழில்கூடம் கட்டுவதற்கு, இயந்திரங்கள் வாங்குவதற்கு, ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களுக்கு கூடுதல் இயந்திரங்கள் வாங்குவதற்கு, நடைமுறை மூலதனத்திற்கு கடன் பெறலாம். அசையா சொத்துகளின் அடமானத்தின்பேரில் கடன் வழங்கப்படும்.
இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா், கோவில்பட்டியில் உள்ள தாய்கோ வங்கி கிளை மேலாளரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...