47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மதுபான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக் கடைகள், மதுபானம் எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 8:58 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக் கடைகள், மதுபானம் எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காரைக்கால் கலால் துணை ஆணையா் எம். பூஜா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எஃப்எல்-1, எஃப்எல்-2 (சுற்றுலா வகை), ஹோட்டல் மற்றும் உணவகங்கள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்.

மேலும், ஐஎம்எஃப்எல், ஐஎம்எல் சாராயம், கள் உள்ளிட்ட மதுபானங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்டம் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.