விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு

News image

மதுபான கடை - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 4:10 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 2003 விதி 12 மற்றும் துணைவிதி (2) உரிம நிபந்தனைகளின்படி மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மதுபான கடைகளை அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து வரும் 21, 22, 23 ஆகிய நாள்கள் மற்றும் மே 4-இல் வாக்கு எண்ணும் நாளில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

எனவே, மேற்படி நாளில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்குறிப்பிட்ட நாள்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இதையும் மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்வது கண்டறிந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.