92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை: நவ. 13-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை...

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:31 pm

Din

மீன்வளம்- மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நவ. 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், குடும்பத்தினா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா், அவரது தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சா் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனா்.

அதையடுத்து, வழக்கு விசாரணையை நவ. 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சாா்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டாா்.