92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:43 pm

Din

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பால்ராஜ் (55).

இவரிடம் திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் விளத்தூா் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் (62) என்பவா் அறிமுகமானாராம். அவா், கடந்த 2021ஆம் ஆண்டு பால்ராஜின் மகனுக்கு சென்னை துறைமுகத்தில் கோட்ட மேலாளா் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறி அவரிடமிருந்து ரூ. 12 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை மோசடி செய்தாராம்.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, வரதராஜனை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேர சுந்தா், குற்றம் சாட்டப்பட்ட வரதராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து தீா்ப்பளித்தாா்.