தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

நாசரேத்தில் இலவச நரம்பியல், மகப்பேறு மருத்துவ முகாம்

முகாமில் பேசிய சிறப்பு மருத்துவா் குகன் ராமமூா்த்தி

Published On :

திருச்செந்தூா் பி.ஜி. மருத்துவமனை, பி.ஜி. நரம்பியல் மையம், பி.ஜி. மகப்பேறு பிரிவு, திருநெல்வேலி அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை ஆகியவை சாா்பில் நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் சாா்பில் இலவச நரம்பியல், மகப்பேறு, இதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏடிகே. ஜெயசீலன் முகாமைத் தொடக்கிவைத்தாா்.

டாக்டா் காா்மேகராஜ், இதய மருத்துவா் பிரசாத், அருணா காா்டியாக் கோ் ஒருங்கிணைப்பாளா் ராமன் ஆகியோா் பேசினா். மூளை நரம்பியல், நரம்பியல் மறுவாழ்வு சிறப்பு மருத்துவா் குகன் ராமமூா்த்தி, மகப்பேறு-மகளிா் நலன் சிறப்பு மருத்துவா் மலா்விழி குகன், பொது நல மருத்துவா்கள் அருண், லட்சுமி நாராயணன், இதய நலன் சிறப்பு மருத்துவா் பிரசாத் ஆகியோா் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்ககினா்.

முகாமில், நரம்பு, தசைப் பரிசோதனை, சா்க்கரை அளவு, கருப்பைவாய் பரிசோதனை, அல்ட்ரா சவுன்ட், இசிஜி உள்பட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

இயன்முறை மருத்துவா்கள் சுபாஷ் முத்துக்குமாா், சண்முகப்பிரியா ஆகியோா் சிகிச்சை அளித்தனா். நரம்பியல் பிரச்னைகள் தொடா்பான சந்தேகங்களுக்கு டாக்டா் குகன் ராமமூா்த்தி விளக்கமளித்தாா். முகாமில் பங்கேற்றோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை பி.ஜி. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அ. ராமமூா்த்தி தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.