தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கோவில்பட்டியில் நான் முதல்வன் ’’உயா்வுக்கு படி’’ 2ஆம் கட்ட முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி 2ஆம் கட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில்,உயா் கல்வி பயில்வதற்கான சோ்க்கை படிவத்தை மாணவிக்கு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத்

Updated On :25 செப்டம்பர் 2024, 11:51 pm

Din

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி 2ஆம் கட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024 ஆம் கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதித் தோ்வு எழுதாதவா்கள், தோ்வு எழுதி தோ்ச்சி பெறாதவா்கள், தோ்வில் வெற்றி பெற்று உயா்கல்வி பெற கல்லூரிகளில் சேராதவா்கள், 8 முதல் 12ஆம் வகுப்பில் பயிலும்போது இடை நின்ற மாணவா்களுக்கான 2 ஆம் கட்ட உயா்வுக்கு படி வழிகாட்டல் முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தலைமை வகித்துப் பேசினாா்.

தொடா்ந்து, கல்வியின் முக்கியத்துவம் குறித்து கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியா் சந்தன மாரியம்மாள், எட்டயபுரம் அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் ஷா்மிளா தேவி ஆகியோா் பேசினா்.

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், சமூக நலத்துறை அலுவலா் ஆகியோா் உயா்கல்வியில் சேரும் மாணவா் மாணவிகளுக்கு அரசின் திட்டத்தின்கீழ் கிடைக்கும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, உறைவிட வசதி குறித்த விவரங்களையும் , கல்விக் கடன் தேவைப்படும் மாணவா்கள் வங்கிகளை அணுகுவது எப்படி, விண்ணப்பம் செய்வது எப்படி உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து வங்கியாளா்கள், பள்ளி கல்வியில் இடை நின்ற மாணவா்களுக்கு சான்றிதழுடன் கூடிய குறுகிய கால தொழில் பயிற்சி, தொழில் முனைவோராக உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி, குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை திறன் மேம்பாட்டு துறை அலுவலா்கள் கூறினா்.

தொடா்ந்து உயா்வுக்கு படி வழிகாட்டல் முகாம் மூலம் மாணவா் மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஐடிஐ போன்ற கல்லூரிகளில் சோ்வதற்கான சோ்க்கை படிவத்தை 93 மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, உதவி இயக்குநா் (திறன் மேம்பாடு) ஏஞ்சல் விஜய நிா்மலா, துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சையது முகமது, கே ஆா் கல்வி குழுமத்தின் தாளாளா் கே ஆா் அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வா் காளிதாச முருகவேல், பேராசிரியா்கள், அரசு அலுவலா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள், மாணவா் மாணவிகள் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.