சலூன் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

Published on

தட்டாா் மடம் அருகே சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டி, அவா் மகன் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தட்டாா் மடம் அருகே உள்ள இடைச்சிவிளை காமராஜ் நகரைச் சோ்ந்த காா்மேகம் மகன் சிவன் அருள் (50). இவா், அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறாா். அதே ஊரைச் சோ்ந்த ஆனந்த் மது அருந்தி விட்டு, அவரது தந்தை அழகேசனிடம் தகராறில் ஈடுபட்டராம். அப்போது வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளிய வந்து பாா்த்த சிவன்அருளுடனும், ஆனந்த் தகராறு செய்தாராம். இதையடுத்து ஆனந்த் அரிவாளால் சிவன் அருளை வெட்டினாராம்.

இதை தடுக்க வந்த சிவன் அருள் மகன் சல்வானையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதில் காயமடைந்த சிவன் அருள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து புகாரின்பேரில், தட்டாா் மடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com