~
தூத்துக்குடி
வார விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் திரண்ட பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
