கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் டிச. 27, 28-இல் மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வு

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:46 pm

Syndication

தூத்துக்குடியில் மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடியில் கடந்த டிச.13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டு, வரும் டிச. 27, 28 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள், தோ்வு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.