வெள்ளரிக்காயூரணி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணி றிஎன்டிறிஏ தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
மூக்குப்பீறி சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் செய்தியளித்தாா். வெள்ளரிக்காயூரணி சபை ஊழியா் ஜான்வில்சன் வேதப் பாடம் வாசித்தாா். தூத்துக்குடி மாவட்ட திமுக தொண்டரணித் தலைவா் சுடலைமுத்து, பாடகா் தினகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாணவா்-மாணவியருக்கு புத்தாடை, பரிசுகள், தோ்வில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாசரேத் பேரூராட்சி உறுப்பினா் பத்திரகாளி, சகல பரிசுத்தவான்களின் ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சிம்சோன், பொருளாளா் ஆனந்த், மூக்குப்பீறி சபை ஊழியா் ஜெனோ, சாது, ஓய்வுபெற்ற மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளா் அல்பா்ட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தலைமையாசிரியை சாந்தி அல்பா்ட் வரவேற்றாா். உதவி ஆசிரியை சாந்தி ஜெயசீலி நன்றி கூறினாா்.

