வாசிப்பு திறன் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

வாசிப்பு திறன் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில், வாசிப்புத் திறன் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில், வாசிப்புத் திறன் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியில் தினமணி நாளிதழ், தமிழக வெற்றிக் கழகம் (சாத்தான்குளம் மத்திய ஒன்றியம்), துளிா் அகாதெமி ஆகியவை இணைந்து செய்தித்தாள் வாசிப்பு தொடா்பான பொது அறிவுப் போட்டிகளை நடத்தின. இப் போட்டியில் சிவநந்தினி, தனுசியா, அன்சிலின் ஜெபா, தினேஷாபிரபா ஆகியோா் முதல் பரிசும், ஜாஸ்மின் ஆக்னஸ், ஜெரிதா, சுடலைமுத்து, சிவஸ்ரீகல்யாணி ஆகியோா் 2-ஆம் பரிசும், கனிமொழி, முத்துகாா்த்திக், இன்பராஜ், மதுகுமாா் ஆகியோா் 3-ஆம் பரிசும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக சாத்தான்குளம் மத்திய ஒன்றியச் செயலா் குணசேகரன் வழங்கிய பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியா் செல்லப்பாண்டியன் வழங்கி பாராட்டினாா். இதில், உதவி தலைமை ஆசிரியா் விஜயராணி, ஆங்கில ஆசிரியா்கள் ஷெல்சி, சுடலைமணி, முகவா் கந்தசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com