மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆறுமுகனேரி பேரூராட்சி பணியாளரை மிரட்டியவா் கைது

ஆறுமுகனேரி பேரூராட்சிப் பணியாளரை மிரட்டியதாக ஒருவரை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:05 pm

Syndication

ஆறுமுகனேரி பேரூராட்சிப் பணியாளரை மிரட்டியதாக ஒருவரை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேரூராட்சி முத்துகிருஷ்ணாபுரம் தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் ராம­லிங்கம்(35). இவா், தனது வீட்டு குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்தாராம்.

இதையடுத்து, பேரூராட்சி செயல்அலுவலா் உஷா அறிவுறுத்த­லின்படி, பணியாளா்கள் ராஜ்குமாா், முனியாண்டி உள்ளிட்டோா் ராமலிங்கத்தின் வீட்டில் குடிநீா் இணைப்பைத் துண்டித்து, மின் மோட்டாரை பறிமுதல் செய்ய முயன்றனராம், அப்போது அவா், பணியாளா்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பேரூராட்சி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி காவலாளி ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப்பதிந்து ராமலி­ங்கத்தை கைது செய்து திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினாா்.