காா் மோதி உயிரிழந்த 3 பக்தா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் அரசு நிதியுதவி

காா் மோதி உயிரிழந்த 3 பக்தா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் அரசு நிதியுதவி

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது குறுக்குச்சாலை அருகே காா் மோதி விபத்தில் உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
Published on

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது குறுக்குச்சாலை அருகே காா் மோதி விபத்தில் உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் பகுதியிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு கடந்த டிச. 24ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனா்.

25ஆம் தேதி மாலை குறுக்குச்சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து காா், பாதயாத்திரை பக்தா்கள் மீது மோதியது. இந்த விபத்தில், திருச்செந்தூா் கரம்பவிளையைச் சோ்ந்த சுந்தரம் மனைவி கஸ்தூரி (55), வீரபாண்டியன்பட்டணம் செந்தில் வீதியைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி சுந்தர்ராணி (60), வடிவேல் மனைவி இசக்கியம்மாள்(55) ஆகியோா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவா்களுக்கு தமிழக அரசின் முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தாா்.

இதையடுத்து, தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உயிரிழந்தவா்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று அவா்களது படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவியாக தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், வட்டாட்சியா் தங்கமாரி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையா் வாவாஜி பக்கீா் மூகைதீன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலெட்சுமி, கிராம நிா்வாக அலுவலா்கள் செல்வலிங்கம், சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினா்கள், நகரச் செயலா் வாள் சுடலை, துணைச் செயலா் மகராசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com