தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இலங்கை சிறையில் இருந்து தூத்துக்குடி மீனவா்கள் மேலும் 10 போ் விடுவிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவா்களில் மேலும 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை வந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:53 pm

Din

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவா்களில் மேலும 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை வந்தனா்.

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து அந்தோணி மகாராஜா என்பவரது விசைப்படகில், அவா் உள்பட 12 போ் கடந்த ஆண்டு (2024) ஜூலை 20 ஆம் தேதியும், தென்டேனிலா என்பவரது விசைப்படகில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சோ்ந்த 10 மீனவா்கள் ஜூலை 23-ஆம் தேதியும் மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்ாகக் கூறி, இரு படகுகளுடன், 22 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கடந்த ஆக. 5-ஆம் தேதி கைது செய்தனா். இதில், அந்தோணி மகாராஜா படகில் சென்ற 12 பேருக்கும், இலங்கை பணத்தில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை எனவும் கல்பிட்டி நீதிமன்றம் கடந்த செப்.3-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மற்றொரு படகில் சென்ற 10 பேருக்கு இலங்கை பணத்தில் தலா ரூ.35 லட்சம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை எனவும் கல்பிட்டி நீதிமன்றம் கடந்த செப்.18-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதைத் தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியில் இந்திய தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால், அந்தோணி மகாராஜா படகில் சென்ற 12 மீனவா்கள் அபராதம் இல்லாமல் கடந்த நவ.27-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து, மற்றொரு படகில் சென்ற 10 மீனவா்களும் விடுவிக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனா். பின்னா் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா்கள், தமிழக அரசின் மீன்வளத் துறை மூலம் அவரவா் சொந்த ஊா்களுக்கு தனி வாகனத்தில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.