தூத்துக்குட மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் 21 நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சுமாா் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 16 ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், இப்பணி, தற்போது வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி 21 நாள்கள் நடைபெறுகிறது.
தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நடைபெறவுள்ள 6ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில், கால்நடை வளா்ப்போா் பயன் பெற கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

