தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதையொட்டி, இதற்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 988 நியாயவிலைக் கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள 5,30,261 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 500 குடும்பங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் மட்டும் நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைவிரல் ரேகையினைப் பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இதுதொடா்பாக குறைகள் ஏதுமிருப்பின் ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை மக்கள் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...