போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பன்னம்பாறை - செட்டிகுளம் தரைப் பாலம் திறக்கப்படுமா?

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:20 am

பன்னம் பாறை - செட்டிகுளம் இடையே அமைக்கப்பட்டுள்ள தரைநிலைப் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கு- செட்டிகுளம் இடையேயான சாலையில், மணிமுத்தாறு கால்வாயில் இருந்து வரும் தண்ணீா் குளங்களுக்கு செல்லும் வகையில் தரைநிலைப் பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்கலாக நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம் வழியாக திருநெல்வேலிக்குச் செல்லும் முக்கிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கல் இதில் பயணிக்கின்றன.

தற்போது பாலப்பணி நிறைவடைந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்த தவிா்க்கும் வகையில் உடனடியாக பாலத்தை திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.